லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

மன்னிக்க வேண்டும்!

வாசகர்களின் பல பின்னூட்டங்கள், என் ஜிமெயில் அக்கவுண்டின் ‘ஸ்பாம்’ செட்டிங்குக்குள் புகுந்து மாதா மாதம் அநாதையாய்க் கேட்பாரின்றி காலாவதியாகிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.  பின்னூட்டங்கள் ஒழுங்காகவே வந்துகொண்டிருந்தன. வோர்ட்பிரஸ் அல்லது ஜிமெயில் செட்டிங்சில் ஏதோ சமீப அப்டேட்டின்போது மாற்றம் செய்து விட்டார்கள் போலும் ;-(
இப்பொழுது சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், உங்கள் பின்னூட்டங்கள் சரியான முறையில் வெளிவராமல் இருந்திருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். என்னுடைய யாஹு முகவரியிலும் இனிமேல் எனக்குத் தெரியப்படுத்தலாம். (அதே [..மேலும் படிக்க..]

செவ்வடையான மசால்வடையே!

செவ்வடையான மசால்வடையே!
———————————————–
’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக்  குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.
ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!
ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ [..மேலும் படிக்க..]

கணினியில் கன்னித் தமிழ் வளர்ந்த கதை!

“இணையம், இணையத் தமிழ் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதித் தாருங்கள்” என்று நண்பர் நா. கணேசன் சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். ஏதோ விழா மலருக்கு என்று நினைவு. இது என்ன ஆயிற்று, வெளியானதா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது.
அதனாலென்ன, இங்கே வெளியிட்டு விடலாமே என்று இன்று காலை தோன்றியதன் பலனை இனிமேல் அனுபவியுங்கள்!
*****
“ஏய், இவளே! ஓடி வந்து இதைப் பாரேன்! உன் பெயரைத் கம்ப்யூட்டரில் தமிழில் அடித்திருக்கிறேன், பார்!”
வீட்டிலே ஒரு புதுக் குழந்தை பிறந்ததும் [..மேலும் படிக்க..]

ஒரு ஜூரியின் டயரி – 4 1/2

’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ – இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள்.
‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ – இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள்.
என் ஜூரி டயரி  படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்:
‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’
‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’
‘ஒஹோ, கலிஃபோர்னியாவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியமோ, ஈஸ்ட் [..மேலும் படிக்க..]

ஒரு ஜூரியின் டயரி -4

“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’
வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!.
வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. வீர மரணம் [..மேலும் படிக்க..]

ஒரு ஜூரியின் டயரி -3

நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்!
அர்ச்சகரே கோவிலில் ஆட்டம் போட்டால் ஆண்டவன் போவதுதான் எங்கே?
காக்கிச் சட்டையே கைலிக்கு மாறி ஆட்டோவிலேறி ஆட்டையப் போட்டால்?
மக்களைக் காப்பாற்றி ரட்சிக்கவேண்டிய போலீஸ் அதை மறந்து உட்டாலக்கடி வேலைகளில் ஈடுபட்டதால் எழுந்த கேஸ்தான் நம் ஜூரி டையரியின் அடுத்த பக்கம்.
*** *** ***
லாஸ் ஏஞ்சல்ஸ்- பிரம்மாண்டமான ஒரு மாநகர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இங்கேயும் பெருநகர், புறநகர், வெளிநகர் எல்லாம் தாண்டிய சிற்றூர்களில் அங்குமிங்குமாகச் சில வீடுகள். துருப்பிடித்த ஓட்டை உடைசல் கார்கள். [..மேலும் படிக்க..]

ஒரு ஜுரியின் டயரி -2

’கலக்கப் போவது யாரு?’
முதல் திருட்டு முத்தம், முதன்முறை செவுளில் வாங்கிய ‘பளார்’, முதன் முதல் கசமுசா மேட்டர் அளவுக்கு முதல் ஜூரி கேசும் முக்கியமானது தான்.
காரணமே இல்லாமல் நம் இந்திய சகோதர சகோதரிகளுக்கு அவ்வப்போது சிக்கன்குனியா, ஜாண்டிஸ் என்று அடிக்கடி வருவது போல், அமெரிக்க வாழ் மாந்தருக்கும் ‘ஜூரர் செலக்‌ஷன் நோட்டீஸ்’ என்ற ஒன்று தபாலில் திடீரென்று வரும்.
அது வந்தவுடனேயே அதைப் படிக்காமல் அப்படியே குப்பையில் போடக் கை கால் பரபரக்கும். இருந்தாலும் அதில் சிவப்பு மையில் [..மேலும் படிக்க..]

முதலை, நல்ல பாம்பு, ரோமுலஸ்!

’ஒரு ஜூரியின் டயரி -2’ எழுதிக் கொண்டிக்கும்போது ஒரு சேஞ்சுக்காக நெட்டில் உலாத்திக் கொண்டிருக்கும்போது, இந்த அபூர்வமான விடியோவைப் பார்த்தேன்.
நான் எழுதி முடிக்கும்வரை நீங்கள் படம் பார்த்துக் கொண்டிருங்கள்!

வாழ்த்து செய்திகள்! நன்றி!

தொலைபேசி, தனி மடல், சாட் என்று எல்லா ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்து செய்திகள் அனுப்பி இருக்கின்ற வாசக, எழுத்தாள நண்பர்களுக்கு நன்றி!
எல்லோரும் இளித்திருக்க என்பதுவேயல்லாமல வேறொன்றறியேன் பராபரமே!
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

ஒரு ஜுரியின் டயரி -1

கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.
ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?
‘ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)
மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் [..மேலும் படிக்க..]

« Older Entries  

Get Adobe Flash playerPlugin by wpburn.com wordpress themes