Archive for 'general'
வாசகர்களின் பல பின்னூட்டங்கள், என் ஜிமெயில் அக்கவுண்டின் ‘ஸ்பாம்’ செட்டிங்குக்குள் புகுந்து மாதா மாதம் அநாதையாய்க் கேட்பாரின்றி காலாவதியாகிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். பின்னூட்டங்கள் ஒழுங்காகவே வந்துகொண்டிருந்தன. வோர்ட்பிரஸ் அல்லது ஜிமெயில் செட்டிங்சில் ஏதோ சமீப அப்டேட்டின்போது மாற்றம் செய்து விட்டார்கள் போலும் ;-(
இப்பொழுது சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், உங்கள் பின்னூட்டங்கள் சரியான முறையில் வெளிவராமல் இருந்திருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். என்னுடைய யாஹு முகவரியிலும் இனிமேல் எனக்குத் தெரியப்படுத்தலாம். (அதே [..மேலும் படிக்க..]
அதிரடி வேட்டுச் சத்தம்
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை
நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட்
அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்
ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்
கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளி 2009!
இது என்னுடைய 100 வது போஸ்ட் என்பதை இப்போதுதான் தற்செயலாக கவனிக்கிறேன்.
போஸ்டர் ஒட்ட, ஃப்ளெக்சி பேனர்கள் அடிக்க, கட்அவுட்கள் வைக்க, கலெக்ஷன் கல்லா பார்க்க, கோவில் கட்ட, குடம் குடமாய்ப் பால் அபிஷேகம் செய்து கொள்ள … ஊஹும், எதற்குமே நேரம் இல்லை!
‘யாம் பெற்ற இன்பம்’ தொடரின் 7 வது அத்தியாயத்தில் சென்ற வருடத்திய திருமெய்ச்சூர் லலிதாம்பிகை கோவில் விசிட் பற்றி எழுத ஆரம்பிக்கின்ற நேரத்தில் தான் ஒரு அசரீரி கேட்டது:
“லலிதாம்பிகை பற்றி அப்புறமாக எழுதலாம். பல் [..மேலும் படிக்க..]
இந்திரா காந்தி அளவுக்கு சமகால இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மாணிக்கப் பெண்களுள் ஒருவர் கிரண் பேடி IPS.
23 வயதில் IPS பாஸ் செய்த முதல் இந்தியப் பெண், ஆணாதிக்க அரசாங்கத்தாலும், லஞ்ச லாவண்ய அரசியல்வாதிகளாலும், எப்படியெல்லாமோ அலைக்கழிக்கப்பட்டாலும், எல்லாவற்றையும் மீறி எப்படி சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார் என்பதைச் சொல்லும் ஆஸ்திரேலிய டாக்குமெண்டரி, ‘Yes Madam, Sir!’
இப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான இந்தியப் பெண்ணைப் பற்றி இந்தியாவிலிருந்து ஏன் யாரும் டாக்குமெண்டரி படமெடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. எடுத்திருந்தால், அதை [..மேலும் படிக்க..]
‘எழுதாததும் சுகம்’ என்று பாரா போன்ற ஜாம்பவான்கள் சற்றே இளைப்பாற நினைக்கலாம்.
ஓடிக் களைத்த ரேஸ் குதிரைகள், ஒவ்வொன்றாய்க் கோப்பைகள் வென்ற குதிரைகள், கொஞ்சம் ஓரமாய் நின்று, சற்று நேரம் அசை போட நினைக்கலாம். மண்ணில் புரண்டு அசதி போக்கலாம். தப்பில்லை!
வெற்றியால் வந்த அசதி அது. அடுத்த ரவுண்டு ஓடுவதற்கும், இன்னொரு கோப்பையை எட்டிப் பறிப்பதற்கும் அந்த ரேஸ் குதிரைகளுக்குத் தேவையான ஓய்வு அது. ஓய்விலும் அந்த இரும்புக் குதிரைகளின் சிந்தனை ஓயாமல் அடுத்த இலக்கைப் பற்றிய [..மேலும் படிக்க..]
யூட்யூபில் ஒரு ‘அருமையான’ பாடல் காட்சி பார்த்தேன்!
http://www.youtube.com/watch?v=KCOzDE3cyrM
நீங்களும் பார்த்து சிரியுங்கள்!
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்வதெல்லாம் அபத்தம். இறைவனுக்கு எதற்காக எக்ஸ்ட்ரா புகழ்?’ என்று இளையராஜா திருவாய் மலர்ந்து அருளினாராம்!
ரஹ்மானை இடிப்பதாக நினைத்துக்கொண்டு ராஜா இப்படிச் சொல்லியிருப்பது காழ்ப்பின் உச்ச கட்டம். கண்டிக்கத் தக்கது.
ஏ. ஆர். ரஹ்மான் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று அடிக்கடி சொல்வது அடக்கத்தின் காரணமாக அல்லவா? இந்து ஆன்மீகவாதிகள் ‘ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்வது போலத்தானே இதுவும்?
பல பூஜை மந்திரங்களின் முடிவில் [..மேலும் படிக்க..]
‘யாம் பெற்ற இன்பம் -6′ ம் பாகம் இருக்கட்டும். அதற்கு முன், இந்த unexpected அசடு வழிதலை உங்களிடம் நான் சொல்லியே ஆக வேண்டும்!
நாளைக்கு என் மனைவியின் பிறந்த நாள் என்பதால், அம்மாளுவை ஐஸ் வைக்க, நான் மேற்படி மனைவியாரின் காரைத் துடைத்துப் புதுப்பித்தல், வீட்டைத் துடைத்து வேக்குவம் செய்தல், வீட்டுக் குப்பைகளை வெளியிலே கொட்டல் -இன்னபிற ஜால்ரா சமாசாரங்களில் ஈடு பட்டிருந்தபோது தான் அந்த ஐடியா வந்தது.
எந்த ஐடியா?
ஆஃபீசிலிருந்து மேற்படியார் வருமுன்னரே, கொஞ்சமாக சமையலையும் [..மேலும் படிக்க..]
After about only 40 days in banktrupcy, GM is emerging back as 61% US govt. owned?!
http://www.forbes.com/2009/07/10/general-motors-bankruptcy-business-autos-gm.html
GM now means General Motors or Government Motors ?!
’யாம் பெற்ற இன்பம்- 3’ ல், நான் பின்வருமாறு எழுதியிருந்தேன்:
” … இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா) எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.”
பின்னூட்டத்தில், சுந்தர், “நானும் ரொம்ப நாளா தவிச்சிட்டிருக்கேன் இந்த ‘கம்பலை’க்கு அர்த்தம் புரியாம….நீராச்சும் சொல்லுவீர்னு பார்த்தா……இப்படி அம்போன்னு விட்டா எப்படி ??” என்று கேட்டிருந்தார்.
சுந்தர் கேட்கும்போது சும்மா இருக்கலாமோ? நாம் கேட்ட கேள்விக்கு நாமே [..மேலும் படிக்க..]
ஒரு வார காலம் ஒரு பிரபல முதலமைச்சரைக் காணோம் என்றால் நாடு என்ன ஆகும்?
வீட்டிலே கேட்டால், “இதோ, தெருக்கோடிக்குப் பால் பாக்கெட் வாங்கப் போயிருக்காருங்க, வந்துருவாரு, இப்டியே குந்துங்க” என்று பீலா விடுகிறார்கள்.
ஆஃபீசுக்குப் போனால், “அடேடே, மீட்டிங் முடிந்து இப்போது தானே வீட்டுப் பக்கம் போனார்” என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.
ஆளு இருக்காரா, பூட்டாரா என்பது கூடத் தெரியாத திகைப்பு. போலீஸ் கையைப் பிசைகிறது. FBI “எனக்குத் தெரியாது சாமி” என்று ஒதுங்கிக் கொள்கிறது.
அமெரிக்க [..மேலும் படிக்க..]
சமீபத்திய பின்னூட்டங்கள்