லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

Archive for 'தொடர்கள்'

ஒரு ஜூரியின் டயரி – 4 1/2

’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ – இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள்.
‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ – இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள்.
என் ஜூரி டயரி  படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்:
‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’
‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’
‘ஒஹோ, கலிஃபோர்னியாவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியமோ, ஈஸ்ட் [..மேலும் படிக்க..]

ஒரு ஜூரியின் டயரி -4

“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’
வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!.
வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. வீர மரணம் [..மேலும் படிக்க..]

ஒரு ஜூரியின் டயரி -3

நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்!
அர்ச்சகரே கோவிலில் ஆட்டம் போட்டால் ஆண்டவன் போவதுதான் எங்கே?
காக்கிச் சட்டையே கைலிக்கு மாறி ஆட்டோவிலேறி ஆட்டையப் போட்டால்?
மக்களைக் காப்பாற்றி ரட்சிக்கவேண்டிய போலீஸ் அதை மறந்து உட்டாலக்கடி வேலைகளில் ஈடுபட்டதால் எழுந்த கேஸ்தான் நம் ஜூரி டையரியின் அடுத்த பக்கம்.
*** *** ***
லாஸ் ஏஞ்சல்ஸ்- பிரம்மாண்டமான ஒரு மாநகர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இங்கேயும் பெருநகர், புறநகர், வெளிநகர் எல்லாம் தாண்டிய சிற்றூர்களில் அங்குமிங்குமாகச் சில வீடுகள். துருப்பிடித்த ஓட்டை உடைசல் கார்கள். [..மேலும் படிக்க..]

ஒரு ஜுரியின் டயரி -2

’கலக்கப் போவது யாரு?’
முதல் திருட்டு முத்தம், முதன்முறை செவுளில் வாங்கிய ‘பளார்’, முதன் முதல் கசமுசா மேட்டர் அளவுக்கு முதல் ஜூரி கேசும் முக்கியமானது தான்.
காரணமே இல்லாமல் நம் இந்திய சகோதர சகோதரிகளுக்கு அவ்வப்போது சிக்கன்குனியா, ஜாண்டிஸ் என்று அடிக்கடி வருவது போல், அமெரிக்க வாழ் மாந்தருக்கும் ‘ஜூரர் செலக்‌ஷன் நோட்டீஸ்’ என்ற ஒன்று தபாலில் திடீரென்று வரும்.
அது வந்தவுடனேயே அதைப் படிக்காமல் அப்படியே குப்பையில் போடக் கை கால் பரபரக்கும். இருந்தாலும் அதில் சிவப்பு மையில் [..மேலும் படிக்க..]

ஒரு ஜுரியின் டயரி -1

கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.
ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?
‘ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)
மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -5

”என்னங்க இது? ‘ஜக்குபாய்’ ஷூட்டிங், ஹாங்காங், பாங்காக்னு ஏதாவது வெளிநாட்டில நடந்த ஷ்ரேஷ்டமான கிசுகிசுக்கள் எழுதுவீங்கன்னு பார்த்தா, நீங்க பக்திப் பழ ரேஞ்சுக்கு அம்பாள், யோகான்னு எழுதிக்கிட்டே போறீங்களே, இது தேவையா?”

“வேணாம், சொல்லிட்டேன், அழுதுருவேன்!”

-மேற்படி தொனியில் சில வாசக நண்பர்கள் என்னை செல்லமாகக் கடிந்து கொண்டாலும், “எதுல ஃபோகஸ் பண்றீங்க, தெரியலியே?” என்று பாரா மாதிரியான ஆசிரிய நண்பர்கள் ’சாட்’டில் சொன்னாலும், பயப்படாதீர்கள். ‘யா.பெ. இ’ தொடரத்தான் போகிறது!

முதலில் இந்தக் கட்டுரைத் தொடரை நான் எழுத நினைத்த [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -4

எலிப் பொறி புகழ் மசால் வடை புகழ் பேரளம் பக்கத்திலிருக்கும் திருமீயச்சூர் போக, எதற்காக திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் அகண்ட காவேரி என்று நான் அலைய வேண்டும்?

காரணம் இருக்கிறது.

துபாயிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, அட, ஆப்பிரிக்கா, ஐஸ்லாண்ட், கானா, எங்கிருந்து எப்போது தமிழ்த் தாயகம் திரும்பி வந்தாலும், நீங்கள் ஒரு ‘பொடென்ஷியல் இன்வெஸ்டர்’ – அதாவது ‘கையில் செம துட்டு வைத்திருக்கிறீர்கள்; உங்களை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்’ என்று நம் தாய்த் திரு நாட்டில் [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -3

2008 செப்டம்பர்- அக்டோபர், சென்னை:
’ஜக்குபாய்’ முதல் கட்ட பாங்காக் படப்பிடிப்பில் சில சீன்கள் (சரத்-ஷ்ரியா-கவுண்டமணி காம்பினேஷன்ஸ்) எடுக்கப்பட்டு, கொஞ்சம் என் வேலை முடிந்ததும், இயக்குனர் ரவி என்னிடம் “பட்டயா பீச்ல ஃபைட் சீன்ஸ் எடுக்க வேண்டியிருக்கு. சரத் இருந்தா போதும். உங்க ஜாக்கி சான் வேலையெல்லாம் இதுல காட்டத் தேவை இருக்காது. நீங்க பீச்சுக்கு வந்தா கூட்டத்தை சமாளிக்கவே எங்களுக்கு நேரம் சரியாப் போயிடும். அதுக்காக நீங்க ஹாலிவுட்டுக்கு திரும்பிட வேணாம். வேணும்னா சென்னைக்குப் போய் ரெஸ்ட் [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -2

எல்லா சென்னை சினிமா கம்பெனிகளுக்கும் பொதுவான இரண்டு சட்டங்கள் உண்டு.
1. முதல் ஷெட்யூல் எப்போதுமே படு கிராண்டாக, விலாவாரியான விபரங்களுடன் இருக்கும்.
2. முதல் ஷெட்யூல் கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக மாற்றப்படும்.
இந்த இரண்டு பொது விதிகளையும் நான் கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த ‘ஹாலிவுட் அழைக்கிறது’ பதிப்பில், ‘சிலேட்டு, பல்ப்பம், ஸ்டோரி போர்டு’ அத்தியாயத்தில் கண்டிப்பாகச் சேர்த்து விலாவாரியாக விளக்கி விடுகிறேன்.
2007 டிசம்பரில் நான் என் சகதர்மிணியுடன் ஆஸ்திரேலிய திக்விஜயம் முடித்திருந்தபடியால், மெல்பர்னின் சந்து பொந்துகள், [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -1

இமயமலைக்குச் செல்லும் பாதை, லாஸ் ஏஞ்சல்ஸ், பாங்காக், சென்னை, திருமெய்ச்சூர், கூத்தனூர், மயிலாடுதுறை வழியாகத்தான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். டெல்லிக்கு ஃப்ளைட் போட்டு ரிஷிகேஷ் போவது ரஜினி ரூட். அண்ணன் எவ்வழி, அவ்வழி நம் வழி அல்ல. அதெல்லாம் அரதப் பழசு. நம் வழி தனி வழி!

ஜூலை 2008:
லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஜூலை இரவில் என் செல் போன் சந்தோஷமாகக் கூவியது. என்னை எழுப்புவதில அதற்கு அவ்வளவு சந்தோஷம். கண்டா கண்ட நேரத்தில் [..மேலும் படிக்க..]

« Older Entries  

Get Adobe Flash playerPlugin by wpburn.com wordpress themes