Archive for 'கவிதைகள்'
பல்லாங்குழி ஆடும்போது பட்ட விரல்களினால் மின்சாரம் ஏதும் சுட்டு விடவில்லை
கரும்பு வெட்டிய என் விரலைபதறித் துடைத்தழுதபோதுஅவள் பார்வையில்மின்னலெல்லாமில்லை
முல்லைப்பூ பறிக்கையில்ஏணிப்படி தடுக்கிவிடஅணைத்துப் பிடித்தபோதுநட்சத்திரங்கள்வானில் கண் சிமிட்டவில்லை
ஒட்டுத் திண்ணையிலும்மொட்டைக் கிணற்றடியிலும்ஒரு கோடை முடிந்ததுபதினாறு கழிந்தது
ஊருக்குப் போகுமுன்ஒருவருக்கும் தெரியாமல்ஓடி வந்து
அழுத கண்களும்சிவந்த மூக்குமாய்க்கசங்கிய காகிதம் ஒன்றுகொடுத்தாளே?
“நீ என்னை மறந்தாலும்நான் உன்னை மறக்கமாட்டேன்”
எனக்கு மறக்கவில்லைஉனக்கு நினைவிருக்கிறதோடீ?
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
என் கோபங்கள்பாத்திரப் பிரசித்தம்
இரண்டு வயதில்நசுக்கினவெள்ளிக் கிண்டிஇன்னமும் சிரிக்கிறது
ஏழெட்டு வயதில்எடுத்து வீசியஇரண்டு மூன்றுசொம்புகள்அடிக்கிணற்றில்ஆழப் பாசியில்
விடலை வயதில்வீசிய தட்டுகளா¡ல்ஒரே அமாவாசையில்ஓட்டில் உதயமானவைஇரண்டு மூன்றுபௌர்ணமிகள்
என்ன இது சமையலென்றுஎடுத்து வீசிய எவர்சில்வரைபறக்கும் தட்டோவென்றுபார்த்தவர் வியந்தனர்
கோபத்தையெல்லாம்சிரிப்பில்சுருக்கி விட்டேன்
இப்போதெல்லாம்பாத்திரங்கள்நசுங்குவதில்லைமனசு தான் கசங்குகிறதுமற்றவர்கள் கோபித்தால்
அரிசி மாவில் தான்அம்மா கோலம் போடுவாள்
அங்கே ஓர் புள்ளிஇங்கே ஒரு வளைவுநடுநடுவே கோடுகள்சாண சிம்மாசனபூசணிப் பூக்கள்சுற்றிவர வண்டுகள்சின்னச் சின்ன எறும்புகள்
திண்ணையிலிருந்து கசங்கிய கண்களுடன்கோலத்தில் தான்கண் விழிப்பேன்
ஒவ்வொரு நாளும்புதுப் புதுக் கோலம்
தெருவையே அடைத்தபடிசில நாள்காவியுடன்தேர் ஓடும்
ஊர் கூடி நின்று பார்க்கும்செருப்புகள்பய பக்தியாய்ஓரம் நிற்கும்
எத்தனை சொல்லியும் கேட்காமல்பேப்பர்காரன் மட்டும்அசுரன் போல்அழித்துப் போவான்கடங்காரன்வெளியூர்க்காரனாம்
பேப்பரை நிறுத்தி விட்டோம்
ஒரு நாள் கூடகோலங்களை அம்மாஅழித்துப் போட்டது கிடையாதுஅவசரத்தில் போட்டதுண்டு
அப்பாவின் காப்பியில்சர்க்கரை குறைந்தாலோஅக்கா அழுதாலோதம்பி படுத்தினாலோஅவசரமாய் அன்று ஒருஷட்கோணமோநாற்கோணமோ
இப்போது கார் வாங்கி விட்டோம்
கார்கள்கோலங்களின்எதிரிகள்
பாவம் எறும்புகள்பசித்திருக்கும்
காரை விற்றுவிடாலாமென்றால்அம்மா சிரிக்கிறாள்ஆர்த்ரைடிஸ் [..மேலும் படிக்க..]
சமீபத்திய பின்னூட்டங்கள்