Archive for 'கட்டுரைகள்'
செவ்வடையான மசால்வடையே!
———————————————–
’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக் குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.
ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!
ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ [..மேலும் படிக்க..]
சில படிமங்கள், ஆவணங்கள், காசோலைகள் ஆகியவற்றை அவசரமாக இந்தியாவுக்கு அனுப்ப நேர்ந்ததால், இந்த விடுமுறை நாட்களில் FedEx, DHL போன்ற அதியசுரவேக வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள நேர்ந்தது.
கச்சா எண்ணெய் விலை கன்னா பின்னாவென்று உயர்ந்தபோது, தங்கள் ‘ரேட்’டையும் ஆகாய உயரத்திற்கு அவசரமாக ஏற்றிய இந்த நிறுவனங்கள், ஆயில் விலை ஓரளுவுக்கேனும் குறைந்த பின்னரும், தங்கள் ரேட்டை அப்படியே சொர்க்க உலகத்தில் தான் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய எரிச்சல்.
என்னைப் போன்ற சாமானியன் எரிச்சல் பட்டு என்ன ஆகப்போகிறது? வர [..மேலும் படிக்க..]
ஹார்வர்ட்!
அகில உலகப் புகழ் பெற்ற பணக்கார அமெரிக்கப் பல்கலைக் கழகம்!
பாஸ்டன் நகரத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் மணிமகுடங்கள் ஹார்வர்டும், கேம்ப்ரிட்ஜும் என்றால் மிகை இல்லை.
சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி வருடங்களில் ஒரு நாள்.
பாஸ்டன் நகரத்து நடுக்கும் பேய்க் குளிரில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு வயோதிக தம்பதி இறங்கி வருகிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே கொஞ்சம் பாவமாக இருக்கிறது. பாவம், பட்டிக்காட்டு தம்பதி என்பது அவர்கள் அணிந்திருந்த கசங்கல் உடை, நடை, பாவனையியிலேயே தெரிகிறது!
அந்தப் பெண்மணி அணிந்திருந்த ஸ்கர்ட் அவர் [..மேலும் படிக்க..]
(2009 நியூ யார்க் தமிழ் சங்க விழா மலருக்காக எழுதியது)
பச்சை அட்டையோ, கள்ளத் தோணியோ, ஆந்திராவிலிருந்து போலி விசாவோ, எப்படியோ அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தாயிற்று. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த, அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த’ இந்தியாவை விட்டு வெளியே வந்தாயிற்று.
அப்பாடா!
பீச்சாங்கரையில் மட்டுமன்றி எங்கே வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாகத் திரியும் ஜாஜ்வல்ய அம்மணமணிகள், பதினாறு லேன் ஹைவேக்கள், பதினெட்டு வீல் டிரெய்லர்களில் ஏகப்பட்ட கார்கள், விண்ணை முட்டி மேகங்களில் மறையும் கட்டிடங்கள் என்று [..மேலும் படிக்க..]
அதிரடி வேட்டுச் சத்தம்
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை
நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட்
அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்
ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்
கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளி 2009!
‘எழுதாததும் சுகம்’ என்று பாரா போன்ற ஜாம்பவான்கள் சற்றே இளைப்பாற நினைக்கலாம்.
ஓடிக் களைத்த ரேஸ் குதிரைகள், ஒவ்வொன்றாய்க் கோப்பைகள் வென்ற குதிரைகள், கொஞ்சம் ஓரமாய் நின்று, சற்று நேரம் அசை போட நினைக்கலாம். மண்ணில் புரண்டு அசதி போக்கலாம். தப்பில்லை!
வெற்றியால் வந்த அசதி அது. அடுத்த ரவுண்டு ஓடுவதற்கும், இன்னொரு கோப்பையை எட்டிப் பறிப்பதற்கும் அந்த ரேஸ் குதிரைகளுக்குத் தேவையான ஓய்வு அது. ஓய்விலும் அந்த இரும்புக் குதிரைகளின் சிந்தனை ஓயாமல் அடுத்த இலக்கைப் பற்றிய [..மேலும் படிக்க..]
நண்பர்களே, எப்படி இருக்கிறீர்கள்?!
‘எனது இதயம் கனிந்த அன்பான ரசிகப் பெருமக்களுக்கு …’ என்றெல்லாம் உங்களை ரம்பம் போடாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
அமரர் சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு, சில வாரங்கள் சென்னையில் நான் தங்கி இருந்தாலும் சில பல சோதனைக்காலப் பணிகளால் இலக்கிய ஜோதியில் ஐக்கியம் ஆக முடியவில்லை. என் ப்ளாக் பக்கம் கூட நான் எட்டிப் பர்க்கவில்லை என்கிற உண்மை உங்களுக்குத் தெரிந்ததே. அவ்வப்போது ஏதாவது ஜு. வி. அல்லது ரிப்போர்ட்டரில் படம் பார்த்துக் கொறிப்பதோடு [..மேலும் படிக்க..]
சமீபத்திய பின்னூட்டங்கள்