Archive for 'அமெரிக்க அரசியல்'
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் செனட்டர் பாரக் ஒபாமா பெருத்த வெற்றி அடைந்திருக்கிறார் என்பதை மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த நாட்டை ஓட்டாண்டியாக்கி, உருப்படாமல் செய்து பல விதங்களிலும் உலக சமாதானத்தின் பொது விரோதியாக கொடுங்கோல் ஆட்சி செய்த புஷ் அரசாங்கம் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
“இது நடக்குமா?” என்கிற பலத்த கேள்விக்குறியுடன் தான் நான் இந்தத் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வந்தேன்.
“இது நடக்க வேண்டுமே” என்று வேதனைப்பட்டேன்.
‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்தர்மம் [..மேலும் படிக்க..]
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான களத்தில் இறுதிச் சுற்று துரித கதியில் ஆரம்பித்திருக்கிறது.
ஈராக்கை அழித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை அபேஸ் பண்ணி, சரவதேச சந்தையையும் ஒரு வழி பண்ணி, உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், டாலரின் வீழ்ச்சி, வெளியுறவுக் கொள்கையில் பயங்கர திவால் என்று எட்டு வருஷமாக அமெரிக்காவை புஷ் சனியன் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி விட்டது.
இந்த முறை மறுபடியும் கு. கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் … வந்தால் என்ன, வர மாட்டார்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது.
எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, [..மேலும் படிக்க..]
அமெரிக்க அரசியலில் எத்தனையோ அழுகுணி ஆட்டங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுதான்,
ரிபப்ளிகன், டெமாக்ரடிக் கட்சிகளில் உட்கட்சி அசிங்கங்கள் அரங்கேறாத நாளே இல்லை எனலாம்.
சமீப காலங்களில அமெரிக்க வெளியுறவுத்துறை நிகழ்த்தியுள்ள அவலங்கள் கணக்கில் அடங்காதவை.
‘க்யூபா அதிபர் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 எளிய முறைகள்’ என்கிற புத்தகத்தில் அமெரிக்காவின் மானத்தை மானாவாரியாக வாங்கி வெயிலில் உலர்த்துவார்கள். படித்துப் பாருங்கள்.
வாஷிங்டனில் ரிமோட் ஸ்விட்சை இயக்கியபடி பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் அடிக்கும் கொட்டத்துக்கும் எல்லையே இல்லை. என்ன தான் நமக்கு எதிரி நாடாக [..மேலும் படிக்க..]
சமீபத்திய பின்னூட்டங்கள்