லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

Archive for 'பயணம்'

முதலை, நல்ல பாம்பு, ரோமுலஸ்!

’ஒரு ஜூரியின் டயரி -2’ எழுதிக் கொண்டிக்கும்போது ஒரு சேஞ்சுக்காக நெட்டில் உலாத்திக் கொண்டிருக்கும்போது, இந்த அபூர்வமான விடியோவைப் பார்த்தேன். நான் எழுதி முடிக்கும்வரை நீங்கள் படம் பார்த்துக் கொண்டிருங்கள்!

யாம் பெற்ற இன்பம் -6

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, “மொக்கை போடாமல் ஒழுங்காக ப்ளாகில் அவ்வப்போது மறக்காமல் எழுதவும், 2009 முடிவதற்குள் இரண்டு தமிழ் நாவல்கள், மூன்று ஆங்கில சிறுகதைகள், நான்கு தமிழ் சிறுகதைகள், ஒரு படத்திற்காவது கதை-வசனம், ஒரு ஃபுல் ஸ்கிரிப்ட், அப்படியே ஒரு நகைச்சுவை சரித்திரத் தொடர் எல்லாம் எழுதி முடிக்கவேண்டும் தாயே” என்று பெரிய லிஸ்டுடன் வேண்டிக் கொண்டேன். “மொதல்ல உன் குருஜி ரேஞ்சுக்கு லாண்ட்ரி லிஸ்ட் எழுதக் கத்துக்க” என்று சரஸ்வதி சொல்லாமல் சொல்வது [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -5

”என்னங்க இது? ‘ஜக்குபாய்’ ஷூட்டிங், ஹாங்காங், பாங்காக்னு ஏதாவது வெளிநாட்டில நடந்த ஷ்ரேஷ்டமான கிசுகிசுக்கள் எழுதுவீங்கன்னு பார்த்தா, நீங்க பக்திப் பழ ரேஞ்சுக்கு அம்பாள், யோகான்னு எழுதிக்கிட்டே போறீங்களே, இது தேவையா?” “வேணாம், சொல்லிட்டேன், அழுதுருவேன்!” -மேற்படி தொனியில் சில வாசக நண்பர்கள் என்னை செல்லமாகக் கடிந்து கொண்டாலும், “எதுல ஃபோகஸ் பண்றீங்க, தெரியலியே?” என்று பாரா மாதிரியான ஆசிரிய நண்பர்கள் ’சாட்’டில் சொன்னாலும், பயப்படாதீர்கள். ‘யா.பெ. இ’ தொடரத்தான் போகிறது! முதலில் இந்தக் கட்டுரைத் தொடரை [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -4

எலிப் பொறி புகழ் மசால் வடை புகழ் பேரளம் பக்கத்திலிருக்கும் திருமீயச்சூர் போக, எதற்காக திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் அகண்ட காவேரி என்று நான் அலைய வேண்டும்? காரணம் இருக்கிறது. துபாயிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, அட, ஆப்பிரிக்கா, ஐஸ்லாண்ட், கானா, எங்கிருந்து எப்போது தமிழ்த் தாயகம் திரும்பி வந்தாலும், நீங்கள் ஒரு ‘பொடென்ஷியல் இன்வெஸ்டர்’ – அதாவது ‘கையில் செம துட்டு வைத்திருக்கிறீர்கள்; உங்களை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்’ என்று நம் தாய்த் திரு [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -3

2008 செப்டம்பர்- அக்டோபர், சென்னை: ’ஜக்குபாய்’ முதல் கட்ட பாங்காக் படப்பிடிப்பில் சில சீன்கள் (சரத்-ஷ்ரியா-கவுண்டமணி காம்பினேஷன்ஸ்) எடுக்கப்பட்டு, கொஞ்சம் என் வேலை முடிந்ததும், இயக்குனர் ரவி என்னிடம் “பட்டயா பீச்ல ஃபைட் சீன்ஸ் எடுக்க வேண்டியிருக்கு. சரத் இருந்தா போதும். உங்க ஜாக்கி சான் வேலையெல்லாம் இதுல காட்டத் தேவை இருக்காது. நீங்க பீச்சுக்கு வந்தா கூட்டத்தை சமாளிக்கவே எங்களுக்கு நேரம் சரியாப் போயிடும். அதுக்காக நீங்க ஹாலிவுட்டுக்கு திரும்பிட வேணாம். வேணும்னா சென்னைக்குப் போய் [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -2

எல்லா சென்னை சினிமா கம்பெனிகளுக்கும் பொதுவான இரண்டு சட்டங்கள் உண்டு. 1. முதல் ஷெட்யூல் எப்போதுமே படு கிராண்டாக, விலாவாரியான விபரங்களுடன் இருக்கும். 2. முதல் ஷெட்யூல் கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக மாற்றப்படும். இந்த இரண்டு பொது விதிகளையும் நான் கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த ‘ஹாலிவுட் அழைக்கிறது’ பதிப்பில், ‘சிலேட்டு, பல்ப்பம், ஸ்டோரி போர்டு’ அத்தியாயத்தில் கண்டிப்பாகச் சேர்த்து விலாவாரியாக விளக்கி விடுகிறேன். 2007 டிசம்பரில் நான் என் சகதர்மிணியுடன் ஆஸ்திரேலிய திக்விஜயம் முடித்திருந்தபடியால், மெல்பர்னின் சந்து [..மேலும் படிக்க..]

யாம் பெற்ற இன்பம் -1

இமயமலைக்குச் செல்லும் பாதை, லாஸ் ஏஞ்சல்ஸ், பாங்காக், சென்னை, திருமெய்ச்சூர், கூத்தனூர், மயிலாடுதுறை வழியாகத்தான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். டெல்லிக்கு ஃப்ளைட் போட்டு ரிஷிகேஷ் போவது ரஜினி ரூட். அண்ணன் எவ்வழி, அவ்வழி நம் வழி அல்ல. அதெல்லாம் அரதப் பழசு. நம் வழி தனி வழி! ஜூலை 2008: லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஜூலை இரவில் என் செல் போன் சந்தோஷமாகக் கூவியது. என்னை எழுப்புவதில அதற்கு அவ்வளவு சந்தோஷம். கண்டா [..மேலும் படிக்க..]

’யாம் பெற்ற இன்பம்’ – சின்னஞ்சிறு முற்குறிப்பு

”நல்ல காரியங்களை உடனுக்குடன் செய்து விட வேண்டும். உள்ளுக்குள்ளேயே ஊறப்போட்டு, செய்யலாமா, வேண்டாமா என்று தயக்கத்திலும், சோம்பேறித்தனத்திலும் இருந்தால், சோர்வும், சலிப்புமே மிஞ்சும். அன்றாடம் செய்து முடிக்க வேண்டிய பணிகளே வரிசை கட்டி நிற்பதால், எதையும் ’ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம்’ என்று தள்ளிப்போடுவது சுலபம். ‘ஊஹூம், இப்போது வேண்டாம், அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற சால்ஜாப்புக்குத்தான் ஆயிரக் கணக்கான மோசமான உதாரணங்கள் இருக்கின்றனவே. ஆனால், இனிமேலும் ஜகா வாங்காமல், ம்,ம்ம், சீக்கிரம், மொதல்ல எழுந்திரிங்க சொல்றேன், வேற [..மேலும் படிக்க..]

பிறந்தகப் பெருமை -6

சென்னையிலிருந்தோ, மதுரைப் பக்கத்திலிருந்தோ மயிலாடுதுறை ஜங்ஷனில் வந்து இறங்குகிறோம். இரும்புக் கீறல், வெப்பத் தும்மல், நீராவி விக்கல், முனகல், சோர்வுடன் புகைவண்டி ‘தஸ், புஸ்’ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு நிற்பதற்குள்ளாகவே வெளியே தலை நீட்டி, நமக்கு வேண்டியவர்கள் யாராவது கிராமத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பது என் வழக்கம். காருடை காருண்யவான் நண்பர்கள் யாராவது கண்ணில் தென்பட்டால் ஆனந்தக் கூத்தாடும் நெஞ்சம். எங்கள் வீட்டுச் சொந்த வண்டியை எல்லாம் எந்தக் காலத்திலேயோ விற்று விட்டாலும், அவ்வப்போது [..மேலும் படிக்க..]

பிறந்தகப் பெருமை -5

‘மயிலாடுதுறை ஜங்ஷன்’ தலைப்பே, ஒரு சினிமாத் தலைப்பு போல அட்டகாசமாக இல்லை? ‘போண்டா, வடை, டீய்ய்ய், காப்பி’. ‘சார், குமுதம், விகடன், கலைமகள் …’ சின்னப் பையன்களின் வியாபாரக் கூச்சல்கள். ‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ என்கிற இடைவிடா தண்டவாள மணிச் சத்தம். ‘கார்டி’ன் அவ்வப்போதைய விசில். இடையிடையே ‘தி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வில் அரைவ் இன் ப்ளாட்பார்ம் நம்பர் ஒன்’, ‘சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாகச் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ஐந்தாவது பிளாட்ஃபாரத்தில் …’ [..மேலும் படிக்க..]

« Older Entries