லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

Archive for 'நினைவலைகள்'

எம்ஜிஆரும் நானும்!

பல வருடங்கள் ஓடி விட்டாலும், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! அப்போது நான் சென்னையில் இருந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான் லேட்டாக எழுந்து, லேட்டாக காஃபி சாப்பிட்டுவிட்டு, லேட்டாகவே ‘ஹிண்டு’ படித்துக் கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. எது? அதாவது, எங்கள் வீட்டு தொலைபேசி சிணுங்கியது. “ராம் சார் வீடு தானுங்களே? சார், சி எம் வீட்ல இருந்து கூப்பிடறோம், சி எம் உங்ககிட்ட பேசணுமாம், கொஞ்சம் ராமாவரம் வரைக்கும் வநதுட்டுப் போகமுடியுமா?” -அடுத்த முனையில் மிகுந்த [..மேலும் படிக்க..]

கணினியில் கன்னித் தமிழ் வளர்ந்த கதை!

“இணையம், இணையத் தமிழ் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதித் தாருங்கள்” என்று நண்பர் நா. கணேசன் சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். ஏதோ விழா மலருக்கு என்று நினைவு. இது என்ன ஆயிற்று, வெளியானதா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. அதனாலென்ன, இங்கே வெளியிட்டு விடலாமே என்று இன்று காலை தோன்றியதன் பலனை இனிமேல் அனுபவியுங்கள்! ***** “ஏய், இவளே! ஓடி வந்து இதைப் பாரேன்! உன் பெயரைத் கம்ப்யூட்டரில் தமிழில் அடித்திருக்கிறேன், பார்!” வீட்டிலே [..மேலும் படிக்க..]

ஒரு ஜூரியின் டயரி – 4 1/2

’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ – இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள். ‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ – இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள். என் ஜூரி டயரி  படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்: ‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’ ‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’ ‘ஒஹோ, [..மேலும் படிக்க..]

ஒரு ஜூரியின் டயரி -4

“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’ வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!. வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. [..மேலும் படிக்க..]

ஒரு ஜூரியின் டயரி -3

நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்! அர்ச்சகரே கோவிலில் ஆட்டம் போட்டால் ஆண்டவன் போவதுதான் எங்கே? காக்கிச் சட்டையே கைலிக்கு மாறி ஆட்டோவிலேறி ஆட்டையப் போட்டால்? மக்களைக் காப்பாற்றி ரட்சிக்கவேண்டிய போலீஸ் அதை மறந்து உட்டாலக்கடி வேலைகளில் ஈடுபட்டதால் எழுந்த கேஸ்தான் நம் ஜூரி டையரியின் அடுத்த பக்கம். *** *** *** லாஸ் ஏஞ்சல்ஸ்- பிரம்மாண்டமான ஒரு மாநகர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கேயும் பெருநகர், புறநகர், வெளிநகர் எல்லாம் தாண்டிய சிற்றூர்களில் அங்குமிங்குமாகச் [..மேலும் படிக்க..]

ஒரு ஜுரியின் டயரி -2

’கலக்கப் போவது யாரு?’ முதல் திருட்டு முத்தம், முதன்முறை செவுளில் வாங்கிய ‘பளார்’, முதன் முதல் கசமுசா மேட்டர் அளவுக்கு முதல் ஜூரி கேசும் முக்கியமானது தான். காரணமே இல்லாமல் நம் இந்திய சகோதர சகோதரிகளுக்கு அவ்வப்போது சிக்கன்குனியா, ஜாண்டிஸ் என்று அடிக்கடி வருவது போல், அமெரிக்க வாழ் மாந்தருக்கும் ‘ஜூரர் செலக்‌ஷன் நோட்டீஸ்’ என்ற ஒன்று தபாலில் திடீரென்று வரும். அது வந்தவுடனேயே அதைப் படிக்காமல் அப்படியே குப்பையில் போடக் கை கால் பரபரக்கும். இருந்தாலும் [..மேலும் படிக்க..]

ஒரு ஜுரியின் டயரி -1

கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம். ஜூரி தெரியுமில்லையா, ஜூரி? ‘ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!) மரியா கேரியைத் [..மேலும் படிக்க..]

சொல்லித் தெரிவதில்லை ……!

(2009 நியூ யார்க் தமிழ் சங்க விழா மலருக்காக எழுதியது) பச்சை அட்டையோ, கள்ளத் தோணியோ, ஆந்திராவிலிருந்து போலி விசாவோ, எப்படியோ அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தாயிற்று. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த, அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த’ இந்தியாவை விட்டு வெளியே வந்தாயிற்று. அப்பாடா! பீச்சாங்கரையில் மட்டுமன்றி எங்கே வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாகத் திரியும் ஜாஜ்வல்ய அம்மணமணிகள், பதினாறு லேன் ஹைவேக்கள், பதினெட்டு வீல் டிரெய்லர்களில் ஏகப்பட்ட கார்கள், விண்ணை முட்டி மேகங்களில் [..மேலும் படிக்க..]

உனக்கு நினைவிருக்கிறதோடீ?

பல்லாங்குழி ஆடும்போது பட்ட விரல்களினால் மின்சாரம் ஏதும் சுட்டு விடவில்லை கரும்பு வெட்டிய என் விரலைபதறித் துடைத்தழுதபோதுஅவள் பார்வையில்மின்னலெல்லாமில்லை முல்லைப்பூ பறிக்கையில்ஏணிப்படி தடுக்கிவிடஅணைத்துப் பிடித்தபோதுநட்சத்திரங்கள்வானில் கண் சிமிட்டவில்லை ஒட்டுத் திண்ணையிலும்மொட்டைக் கிணற்றடியிலும்ஒரு கோடை முடிந்ததுபதினாறு கழிந்தது ஊருக்குப் போகுமுன்ஒருவருக்கும் தெரியாமல்ஓடி வந்து அழுத கண்களும்சிவந்த மூக்குமாய்க்கசங்கிய காகிதம் ஒன்றுகொடுத்தாளே? “நீ என்னை மறந்தாலும்நான் உன்னை மறக்கமாட்டேன்” எனக்கு மறக்கவில்லைஉனக்கு நினைவிருக்கிறதோடீ? -லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

சுஜாதா மறைவுக்குப் பிறகு …2

மார்ச் 2ம் தேதி, ஞாயிறன்று அமரர் சுஜாதாவின் இரங்கல் கூட்டம் சென்னை நாரத கான சபாவில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது. 3.30க்கு கூட்டம் என்று சொல்லியிருந்தார்கள். வெளியூர் போகிற ப்ரொக்ராமை ஒத்திப் போட்டு விட்டு, 3.20க்கே கனத்த இதயத்துடன் அரங்கில் நுழைந்தேன். சென்ற முறை இந்த அரங்கத்தில் நான் நுழைந்தது சுஜாதாவுடன் தான். யாருடைய கச்சேரி என்று சரியாக நினைவில்லை. சஞ்சய் சுப்ரமணியன் என்று நினைக்கிறேன். அப்போதே அவர் தள்ளாட்டமாக இருந்ததால், கைத்தாங்கலாகத்தான் அழைத்துச் சென்றேன். அதற்கு [..மேலும் படிக்க..]

« Older Entries