Archive for 'நினைவலைகள்'
தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான். சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது: “இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் [..மேலும் படிக்க..]
சென்ற இரண்டு நாட்களாக, என்னுடைய ‘ப்ளாக்’கில் இந்தப் பதிவை எழுத முடியாமல் நான் தவித்திருக்கின்ற தவிப்பு கொஞச நஞ்சமல்ல. எவ்வளவு நேரம் தான் ஒத்திப் போட்டாலும் இதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இப்பொழுது. எழுதவே மனமில்லாமல் தான் இதைப் பதிவு செய்கிறேன். எந்த குருவுக்கு மரணமே இல்லை என்று நான் நினைத்திருநதேனோ, எந்த எழுத்துலக ஜாம்பவானுக்கு முடிவே இல்லை என்று நான் நினைத்திருந்தேனோ, எந்த நண்பருக்கு எதுவும் அசம்பாவிதம் நேரவே நேர்ந்து விடாது என்று நான் [..மேலும் படிக்க..]
சென்னையிலிருந்தோ, மதுரைப் பக்கத்திலிருந்தோ மயிலாடுதுறை ஜங்ஷனில் வந்து இறங்குகிறோம். இரும்புக் கீறல், வெப்பத் தும்மல், நீராவி விக்கல், முனகல், சோர்வுடன் புகைவண்டி ‘தஸ், புஸ்’ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு நிற்பதற்குள்ளாகவே வெளியே தலை நீட்டி, நமக்கு வேண்டியவர்கள் யாராவது கிராமத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பது என் வழக்கம். காருடை காருண்யவான் நண்பர்கள் யாராவது கண்ணில் தென்பட்டால் ஆனந்தக் கூத்தாடும் நெஞ்சம். எங்கள் வீட்டுச் சொந்த வண்டியை எல்லாம் எந்தக் காலத்திலேயோ விற்று விட்டாலும், அவ்வப்போது [..மேலும் படிக்க..]
‘மயிலாடுதுறை ஜங்ஷன்’ தலைப்பே, ஒரு சினிமாத் தலைப்பு போல அட்டகாசமாக இல்லை? ‘போண்டா, வடை, டீய்ய்ய், காப்பி’. ‘சார், குமுதம், விகடன், கலைமகள் …’ சின்னப் பையன்களின் வியாபாரக் கூச்சல்கள். ‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ என்கிற இடைவிடா தண்டவாள மணிச் சத்தம். ‘கார்டி’ன் அவ்வப்போதைய விசில். இடையிடையே ‘தி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வில் அரைவ் இன் ப்ளாட்பார்ம் நம்பர் ஒன்’, ‘சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாகச் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ஐந்தாவது பிளாட்ஃபாரத்தில் …’ [..மேலும் படிக்க..]
காலில் சணல் துணி பூட்ஸுடன், கையில் ஒட்டடைக்குச்சி மாதிரி எதையோ வைத்துச் சிலர் ரோட்டைக் கிறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அருகே எம வாகனம் மாதிரி ஒரு இயந்திரத்திலிருந்து பயங்கரமாகக் கரும் புகை வருமே? ரோட்டில் ஏகப்பட்ட பேர் ‘லபோ, திபோ’ என்று அடித்துக் கொள்வார்களே? நகரவே நகராமல் ஒரு துருப் பிடித்த ரோடு ரோலர் கூட அங்கே நிற்குமே? ஒரு பக்கம் கருப்பு ரசம் மாதிரி உருகிய தார் தனி டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கும். பழைய [..மேலும் படிக்க..]
சமீபத்திய பின்னூட்டங்கள்