லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

Archive for 'அஞ்சலி'

சுஜாதா மறைவுக்குப் பிறகு …2

மார்ச் 2ம் தேதி, ஞாயிறன்று அமரர் சுஜாதாவின் இரங்கல் கூட்டம் சென்னை நாரத கான சபாவில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.
3.30க்கு கூட்டம் என்று சொல்லியிருந்தார்கள். வெளியூர் போகிற ப்ரொக்ராமை ஒத்திப் போட்டு விட்டு, 3.20க்கே கனத்த இதயத்துடன் அரங்கில் நுழைந்தேன்.
சென்ற முறை இந்த அரங்கத்தில் நான் நுழைந்தது சுஜாதாவுடன் தான். யாருடைய கச்சேரி என்று சரியாக நினைவில்லை. சஞ்சய் சுப்ரமணியன் என்று நினைக்கிறேன். அப்போதே அவர் தள்ளாட்டமாக இருந்ததால், கைத்தாங்கலாகத்தான் அழைத்துச் சென்றேன். அதற்கு முன், [..மேலும் படிக்க..]

சுஜாதா மறைவுக்குப் பிறகு …1

தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.
சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது: “இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் நாம் [..மேலும் படிக்க..]

ஒரு ஞான சூரியனின் அஸ்தமனம்

சென்ற இரண்டு நாட்களாக, என்னுடைய ‘ப்ளாக்’கில் இந்தப் பதிவை எழுத முடியாமல் நான் தவித்திருக்கின்ற தவிப்பு கொஞச நஞ்சமல்ல. எவ்வளவு நேரம் தான் ஒத்திப் போட்டாலும் இதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இப்பொழுது. எழுதவே மனமில்லாமல் தான் இதைப் பதிவு செய்கிறேன்.
எந்த குருவுக்கு மரணமே இல்லை என்று நான் நினைத்திருநதேனோ, எந்த எழுத்துலக ஜாம்பவானுக்கு முடிவே இல்லை என்று நான் நினைத்திருந்தேனோ, எந்த நண்பருக்கு எதுவும் அசம்பாவிதம் நேரவே நேர்ந்து விடாது என்று நான் அசட்டையாய் [..மேலும் படிக்க..]

 

Get Adobe Flash playerPlugin by wpburn.com wordpress themes