Archive for 'மீள்பதிவு'
பாத்ரூம் பாகவதரின் ஏக வசன புளகாங்கித கீர்த்தி மகிமையைச் சென்ற வாரம் நுணுக்கமாக விவரித்திருந்தோம். அன்பு மிகுதியால், ஆனந்தத் தாண்டவத்தடுமாற்றத்தால், குருவானவர் தன் பிரதம சிஷ்ய கேடியை ஆலிங்கனம் செய்து கொண்டு உதிர்த்த நல்முத்துக்கள் அந்த மந்தவெளிப் பிராந்தியம் முழுவதிலுமே ஒரு பெரும் சலசலப்பு ஏற்படுத்தியதை விலாவாரியாகச் சொல்லியிருந்தோம். அதைப் படிக்கும்போதே தமக்கு ஏற்பட்ட ரோமாஞ்சனப் புல்லரிப்பு, உணர்ச்சிக் கொந்தளிப்பு, ஆச்சரியப் பரபரப்பு போன்ற அணுக்கமான விபரங்களையும் பல வாசகர்கள் எமக்குத் தனி மெயிலில் விவரித்தெழுதி [..மேலும் படிக்க..]
வரலாற்று அருங் காவிய ஆசிரியர்களிடம் இது தான் ஒரு பெரும் தொல்லை. திடீரென்று கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு எழுந்து, காதில் செருகிய எழுத்தாணியும், கட்கத்தில் இறுக்கிய ஓலைச் சுவடியுமாய் வாரக் கணக்கில் ஆளே காணாமல் போய் விடுவார்கள். நாரதர், வால்மீகி போன்றவர்களே இப்படி அன்பு ரசிகர்களைப் பாடாய்ப்படுத்தி இருக்கிறார்கள் என்று வெண்தாடி வேந்தரே உண்மை சொல்லி இருக்கிறார் ஒரு முறை ஈரோட்டில். ஸ்டாலின் முடிசூடு மகாநாட்டை- மன்னிக்கவும், விழுப்புரம் கட்சி மகாநாட்டை – கொஞ்சம் கவர் பண்ணச் [..மேலும் படிக்க..]
கட்சிப் பதவி பறிபோவது என்பது சாதாரணமான விஷயமா? 'இதெல்லாம் தினந்தோறும் நடக்கிற எவ்ரிடே கலாட்டா தானே? இன்றைய வெத்துகேஸ் நாளைய அமைச்சர் வித்தவுட் போர்ட்ஃபோலியோ' என்று சில வாசகர்கள் அசால்டாக ஸ்டைல் கொட்டாவி விட்டபடி அலுத்துக் கொள்ளலாம். ஆனால் படாத பாடுபட்டு அப்பதவிகள் பெற்ற பதவியாளர்களின் பேக்ரவுண்ட் பவிஷு, ஒரிஜினல் ரிஷிமூலம் என்ன? சைக்கிள் கடையில் காற்றடிப்பது, சாயாக் கடையில் சிங்கிள் அடிப்பது, கடைத்தெருவில் லாட்டரி அடித்து ஃப்ராடு பூட்டான் சீட்டு விற்பது, சினிமா தியேட்டரில் ப்ளாக்கில் [..மேலும் படிக்க..]
பாவம். பாத்ரூம் பாகவதரை வெகு நேரமாக அந்த மந்தவெளி கல்யாண நகர் அசோசியேஷன் கச்சேரியிலேயே நிறுத்தி- மன்னிக்கவும், உட்கார்த்தி- வைத்து விட்டோம். ஜோல்னாப்பை, செம்பட்டைத்தலை சகிதம் அந்த வெள்ளைக்காரன் அல்லவா ஒரு விரல் நீட்டியபடி நின்று கொண்டிருந்தான்? என்ன செய்வது? நாட்டில் அதிமுக்கியமான விஷயங்கள் அசுர கதியில் அல்லவா அரங்கேறிக் கொண்டிருக்கின்றன? வாரம் ஒரு முறையே சரித்திரம் படைக்க நேரமிருக்கும் என் போன்ற எழுத்துக் காவலர்கள் படும் கண்டின்யூடி கஷ்டம் ரசிக வாசகராகிய உங்களுக்குப் புரிகிறதோ? கிட்டத்தட்ட [..மேலும் படிக்க..]
'அண்ணனே என் தலைவன் வேறு கருத்தும் இல்லை மனப் பொருத்தமும் இல்லையே மண்ணுலகத்திலே புண் பட்டதே போதும் மாவட்டத்துக்கே என் காசு எல்லாமே போகும்' சுத்தானந்த பாரதியின் 'கண்ணனே என் கணவன்' பாட்டை உல்டா செய்து, கபாலி ஓங்கி உற்சாகமாக ஐந்தரைக் கட்டையில் பாட ஆரம்பித்தான். தெருவோரமாய் நின்றிருந்த பஞ்ச கல்யாணியொன்று 'காள் காள்' என்று கத்திக் கபாலியை இன்னும் குஷிப்படுத்தியது. சொறி நாய்கள் நாஷ்டா சியஸ்டாவினின்று பயந்து கண் விழித்து முழித்தன. கும்பல் கும்பலாய்ச் சும்மா [..மேலும் படிக்க..]
பாகவதரின் மச்சினி வீடு ஒரு காலத்தில் சி ஐ டி காலனியில் சின்ன காம்பவுண்டுக்குள் 'ஆலமரம், அரச மரம், வேப்ப மரம், புளிய மரம்' என்று விக்ரம்-த்ரிஷாவாய் சாமியழகு கொஞ்சிக் கொண்டிருந்த இடம். அதெல்லாம் பழங் காலம். இருக்கிற எம்ப்டி கிரௌவுண்டையெல்லாம் ஸ்ரீதேவி வாங்கிப் போட்டுக்கொண்டிருந்த இடிமுன்காலம் அது. இப்போதுதான் எல்லாம் கடப்பாறைக்களமாக மாறி மாடிக் கனவுகளாகிக் கலைந்தும் விட்டதே. வாசலை அடைத்துக்கொண்டு முட்டாக்கு மீட்டர் போட்ட ஆட்டோக்கள் துக்கித்துக் கொண்டிருந்தன. சின்னக் கொடிக்கம்பங்களுடன் சிரசில் சிவப்பு [..மேலும் படிக்க..]
"துட்டு வோணாம், அந்தத் துண்ட மட்டும் குடு சார். காரியம் முடிஞ்சிதுன்னு நெனச்சிக்க. நாளைக்குக் காலைல இந்நேரம் அவன் காலி பண்ணிருப்பான்." என்று கடமையே கண்ணாகக் கபாலி, பாகவதரின் சி ஐ டி காலனி மச்சினி வீட்டுப் பக்கம் சம்பூர்ண ராமாயண நடிகர் திலக பரதன் மாதிரி லொங்கு லொங்கென்று நடந்து ஜுட் விட்டது நினைவிருக்கிறதல்லவா? காட்டுக்குப் போய் விட்ட ராமண்ணாவிடம் அவரை விடாமல் துரத்திக்கொண்டே போய் அவர் போட்டுக்கொண்டிருந்த கிழிந்த டயர் செருப்பைத் தம்பி பரதன் [..மேலும் படிக்க..]
"ஆதௌ கீர்த்தனா ரம்பத்திலே, ரகு குல வம்ச திலகன், ஏகபத்தினி விரதனான பகவான் ராமனாகப்பட்டவன், பர ஸ்திரிகளை லுக் விடவே விடாத பகவான் ராமன், …" பாத்ரூம் அன்று மாலை மந்தவெளி கல்யாண நகர் அசோசியேஷன் கூட்டத்தில் உரக்க முழங்கிக் கொண்டிருந்தார். சுமாரான கூட்டம். 'அண்ணமலை' ராதிகாவுக்கு என்ன ஆச்சு? டிராக்கே இப்படி மாறிப் போயிடுத்தே? 'அப்பா' ஏன் ஆரம்ப முதலே இப்படி மொண்ணை ப்ளேடாய் அறுத்துத் தொலைக்கிறது? 'அன்பு மன'த்தில் என்ன சொத்துத் தகராறு என்று [..மேலும் படிக்க..]
"நாய் கடிக்குமாப்பா? பொண்டுகள் ஜோரா ஆம்லட் போட்டுண்டே பம்பரம் விடற எடத்தில எல்லாம் ஊசியப் போட்டு நாற அடிச்சிடுவாளே?" குரல் வந்த திக்கில் எல்லோரும் பார்த்தார்கள். அவசர அவசரமாக கிளாஸ் டம்ளர்கள் ஹை ஸ்பீடில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டன. பீடிகள் கருக்கப்பட்டன. மண்ணடி மாந்தர் குதித்தெழுந்து விண்ணென்று விறைத்து நின்றனர். அழுக்கு பனியனில் மண்ணைத் தட்டி விட்டுக்கொண்டு, கர்சீப்பைக் கழுத்திலிருந்து எடுத்து இடுப்பில் செருகியபடி கபாலி எழுந்து நின்றான். தலிவனே எயுந்து நின்றிருப்பதால் ஆஸ்தானமே மகா மரியாதையுடன் நின்றிருந்தது [..மேலும் படிக்க..]
"நாயரே, அப்டியே கணேசு ஒரு கட்டும், அம்பிகா ஊறுகாயும் குட்தனுப்பு" சொன்னது கபாலி அல்ல. சிஷ்யகோடிகளில் ஒரு தொண்டரடிப்பொடி தெனாவட்டாக நாயரிடம் ஆர்டர் செய்தது. "ஆவட்டும். சரியான ப்ராந்துக் கூட்டம்" முனகியபடி நாயர் கடைக்குள் மறுபடி பதுங்கினார். இந்திய-பாக் எல்லை மாதிரி அங்கே ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது. மறுபடியும் பீரங்கிச் சத்தம் கேட்குமோ அல்லது அமைதிப் புறாக்கள் அங்கே அசிங்கம் பண்ண ஆரம்பிக்குமோ என்கிற பதற்றம் காற்றில் இருந்தது. = 'கடிதோச்சி மெல்லெறிதல் வேண்டும்', 'குணமென்னுங் [..மேலும் படிக்க..]
சமீபத்திய பின்னூட்டங்கள்