ஒரு ஜூரியின் டயரி – 4 1/2
’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ – இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள்.
‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ – இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள்.
என் ஜூரி டயரி படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்:
‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’
‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’
‘ஒஹோ, கலிஃபோர்னியாவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியமோ, ஈஸ்ட் கோஸ்டில் நாங்கள் ஜூரியானால் வெறுமனே பேஸ்தடித்துக் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டி இருக்கிறதே!’
இப்படிப்பட்ட கவலைகளால் நம் வாசகர் உலகம் குழம்பிக் கிடக்கிறது.
தனி மடலில் கேட்கிறார்கள், தண்ணியடித்து விட்டு விம்முகிறார்கள், ”தல, நீ ஒண்ணும் கண்டுக்காத பிரதர்” என்றும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள்.
அதனால் தான் இந்த அரைப் பக்கக் கேள்வி, உங்களைப் பார்த்து:
இந்த ஜூரி டயரியைத் தொடர்ந்து
எழுதிக் கிழிக்கட்டுமா? அல்லது கிழித்துப் போட்டு விடட்டுமா?!
(சட்டம் தன் வேலையைத் தொடருமா ?)
ramboramji on February 24th, 2010
Nallathaane poitrukku 41/2 la 71/2 ya?.. ungala yaaru ippo kozhapivittadhu? Logic pathi kavalaipatta, tamizhana irukkamudiyadhu.. Keep going LA.