அமெரிக்க அரசியல் 2008 (2)
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான களத்தில் இறுதிச் சுற்று துரித கதியில் ஆரம்பித்திருக்கிறது.
ஈராக்கை அழித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை அபேஸ் பண்ணி, சரவதேச சந்தையையும் ஒரு வழி பண்ணி, உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், டாலரின் வீழ்ச்சி, வெளியுறவுக் கொள்கையில் பயங்கர திவால் என்று எட்டு வருஷமாக அமெரிக்காவை புஷ் சனியன் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி விட்டது.
இந்த முறை மறுபடியும் கு. கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் … வந்தால் என்ன, வர மாட்டார்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது.
எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, ‘அப்பீட்’ என்று சொல்லி அவர்களால் ஆட்டத்தை விட்டுச் ‘சுருட்டிய வரை போதும்’ என்று ஒரே ஓட்டமாக ஓடி விடவும் முடியாதல்லவா?
ஆட்சியை விட்டு விலகும் நாளன்று கூட ஈராக்கிலிருந்து மிலிட்டரியைத் திரும்பப் பெறுவதாக எந்த விதமான உத்தேசமும் இல்லை புஷ்ஷாசுரருக்கு. அது வரை ஏதாவது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டியாக வேண்டுமே!
“தேடிச் சோறு தினந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி …” அன்னார் வாழ்க்கை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
ஆனால், குடியரசுக் கட்சியின் திவால் நிலைமை புரிந்து, அதன் சார்பாகக் களத்திலிருந்த நியூயார்க் கவர்னர் ரூடி ஜூலியானி போட்டியிலிருந்து விலகி விட்டார். புத்திசாலி. மைக் ஹக்கபீ, மிட் ராம்னி -இருவருக்கும் கணிசமான சரிவுகள். அநேகமாக செனட்டர் மெக்கெய்னுக்கு அந்த சான்ஸ் அடிக்கலாம். புஷ்ஷை மாதிரியே சொதப்பல் ஆசாமியாக இருந்தாலும், யாரையாவது வேட்பாளராக ஒரு பிரம்மஹத்தியையாவது நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
சரி, எதிர்க் கட்சியில் என்ன நடக்கிறது?
ஜனநாயகக் கட்சியின் சார்பாக பாரக் ஒபாமாவா அல்லது ஹில்லரி கிளிண்டனா என்கிற முடிச்சு வருகின்ற செவ்வாயன்று (ஃபிப். 5, 2008) அவிழ்ந்து விடும். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த சமாதான வெள்ளைப் புறாவா அல்லது ‘பழைய குருடி கதவைத் திறடி’ கேஸான கிளிண்டன் மாமியா?
லாஸ் ஏஞ்சல்ஸின் ‘கோடக் அரங்க’த்தில் இன்றைய மாலை இவர்கள் இருவருக்கும் இடையேயான பேட்டிப் போட்டி நடந்து முடிந்தது.
டெலிவிஷனில் பிரமாதப்படுத்தினார்கள்.
சரி, பேட்டி எப்படி இருந்தது?
பியர்ஸ் ப்ராஸ்னனென்ன, ஸ்பீல்பர்கென்ன, லோக்கல் அரசியல் புள்ளிகளென்ன, ஹாலிவுட்டின் பிரபலங்கள் அரங்கத்தில் புடைசூழ நடந்தேறிய 1 1/2 மணி நேரப் போட்டியில், கடந்த சில வாரங்களில் இவர்களிடையே நடந்தேறிய சகதி வீச்சுகள் இல்லை. இரண்டு பேருமே இறுதிச் சுற்றில் இருப்பதால், ஜனநாயகக் கட்சிக்கு நாடெங்குமே தார்மீக ஆதரவு பெருகி இருப்பதால், ‘நீங்க பிரசிடெண்டா வ்ந்தாக்கூட நானு வைஸ் பிரசிடெண்டா வாரத்துக்கு சான்ஸ் ரொம்ப அதிகம்’ என்று இருவருமே உணர்ந்திருந்ததும் ஒரு பெரிய காரணம்.
“எட்டு வருஷமா நான் அந்தாத்திலே குப்பை கொட்டி இருக்கேனாக்கும. எல்லா பாத்ரூமும் எனக்கு அத்துபடியாக்கும்” என்கிற பெருமை அம்மாவின் பேச்சில் எதிரொலித்தாலும், ஹில்லரிக்கு சாதனைகள் ஏதுமில்லை. ‘ஈராக் போரை முதலில் ஆதரித்தவர்’ என்கிற முத்திரையை அவரால் அழிக்கவே முடியாது. “அப்பால புஷ்ஷு மாமா தான் அழிச்சாட்டியம் பண்ணிட்டாரு, நானு என்னத்தச் சொல்ல” என்கிற ஒப்பாரி படித்த அமெரிக்கர்களிடன் செல்லுபடி ஆகாது. அதற்காக அமெரிக்கர்களிடம், ஈராக்கியரிடம், அகில உலகிடம், ஹில்லரி மன்னிப்பு கேட்கக்கூடத் த்யாரில்லை என்பது வேதனை.
எப்படிப்பட அநியாயப் போர்? 4000 அமெரிக்கர்கள் செத்துப் போனார்களாம். 40000 பேர்கள் முடமாம். பத்து லட்சம் ஈராக்கியரை அழித்து விட்டதாக அமெர்க்காவே ஒப்புக் கொள்கிறது. படிக்கும்போதே நெஞ்சு பதறவில்லை?
அதற்கு ம
Anonymous on January 31st, 2008
//இது வரை அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெண்மணியோ, ஒரு கறுப்பர் இனாத்தவரோ அதிபராக இருந்தது இல்லை//
ஆப்ரகாம் லிங்கன்?